சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்த நிறுவனம் 1986ல் மட்டகளப்பு இராமகிருஷ்ண மிஷனினதும் மட்டக்களப்பு இந்து இளைஞர் நிறுவனத்தினதும் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆலையடிவேம்ப பிரதேச மக்களிடையே இன விடுதலை நோக்கங் கருதிய போக்குக்கள் இளைஞர்களிடையே பரிணமித்ததாலும் சமய சமூக விழுமியங்களுக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் காட்டததாலும் ஆலயங்கள் மூலமாக சமய விழுமியங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் சமய பாதுகாப்பு இளைஞர்கள் பாதுகாப்பு சமூக வறுமை ஒழிப்பு வாழ்வாதார உதவிகள் போன்றன அவசர அவசியங்களாக உணரப்பட்டதன் காரணமாக இம் மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.
இத் தேவையை பூர்த்தி செய்ய இறைபணிசெம்மல் திருவாளர்.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைவராகவும் திரு.V.குணாளன் அதிபர் அவர்கள் செயலாளராகவும் திரு.K.கமலநாதன் ஆசிரியர் அவர்கள் பொருளாளராகவும் மற்றும் புத்திஜீவி ஊடாக சமூகத்தில் செயற்பட்ட DR.M.தேவராஜன், DR.V.தயானந்ந ராஜா, கவிஞர் N.மணிவாசகன், திரு.S.நடராஜா தவிசாளர், திரு.P.தர்மேந்திரன் நில அளவை அத்தியட்சகர், திரு.S..பாலசுந்தரம் சமூக சேவையாளர், திரு.K.சோமசுந்தரம் சீனித் தொழிற்சாலை திரு.V.சந்திரசேகரம் அதிபர், திருவாளர்.S.சாமித்தம்பி சைவப்புலவர். திருவாளர் சற்குணநாதன் தொழிலதிபர் போன்றோர் நிர்வாக உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு உயரிய சபை இந்து இளைஞர் மன்றமாக உருப்பெற்றது. 1987.03.27 இந் நாள் ஆலையடிவேம்பு வரலாற்றில் பொன் நாள் எனலாம்.
1ம் கட்டமாக
• ஆலயங்களில் கூட்டுப்பிரார்த்தனையும் நற் சிந்தனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
• பாடசாலைகளில் இராமகிருஷ்ணமிஷன் அனுசரணையோடு விவேகானந்தரின் விழுமிய செய்திகளை மக்கள் அறியும் பொருட்டு விவேனகானந்த விழாக்கள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதோடு புத்தக கண்காட்சிகளும் வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டது.
• இளைஞர்களை பாதுகாக்கும் பொருட்டு சுற்று வலைப்புகளில் கைதாகும் இளைஞர்களை மீட்பதற்காக பிரஜைகள் குழு அமைத்து இராணுவத்தினரோடு பேச்சு வார்த்தைகளும் நிகழ்த்தப்பட்டன.
• மேலும் மக்களின் பொருளாதார பாதுகாப்பு, வாழ்விடப் பாதுகாப்பு, ஊர் பாதுகாப்பு ஆகியவற்றையும் இராணுவத்தோடு இணைந்து மன்றம் சீரமைத்தது.
• இரண்டுக்கு மேற்பட்ட இளைஞர்களை பறிகொடுத்த மிக வரிய குடும்பங்களுக்கு வாழ்விடங்களையும் இராமகிருஷ்ண மிஷன் உதவியோடு மன்றம் செய்து கொடுத்தது.
• மேலும் இனக்கலவரம் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் பெற்று வழங்கப்பட்டன.
• வாழ்வாதார உதவிகளும் தேவையென கருதியவர்களுக்கு இராமகிருஷ்ண உதவியுடன் வழங்கப்பட்டது.
• பூசா சிறைச்சாலைக்கு சென்று பிள்ளைகளை பார்க்க நிதி இன்றி தவித்த ஏழைகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
• 1986 முதல் 1990ம் ஆண்டு வரை இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1990-1991
காலப்பகுதிகள் மிகவும் துர்பாக்கிய காலம் எனலாம். இக்காலங்களில் இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையிலே நேரடி யுத்தம் நடந்த காலம்.
இதனால் சேவைகள் குறைந்தாலும் அவசர அவசிய சேவைகள் நடைபெற்றன.
1. முகாம்களில் வசித்த மக்களுக்கு உணவு மற்றும் உலர் உணவுகள் முடிந்த வரை வழங்கப்பட்டது.
2. இ.கி.மி உதவியோடு பல தடவைகள் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
3. இராணுவத்தோடு பல முறை பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டன.
4. மீண்டும் பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது.
5. அத்தோடு சமூக பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டதால்; மக்கள் தமது வாழ்விடங்களுக்கு வரத் தொடங்கினர்.
6. பாலர் பாடசாலை அங்குரார்பணம் செய்யப்பட்டது.
1992-1995
அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள் கைவிடப்பட்ட நிலையில் பாதுகாப்பின்றி இராணவத்தினரிடம் அகப்படுவதை தவிர்க்கும் பொருட்டும் அவர்களை பாதுகாக்கும் பொருட்டும் இராணுவத்திடம் ஓர் சிறுவர் இல்லம் விபுலானந்தா அநாதை இல்லம் என்ற பெயரில் ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது.
1992.04.29 ம் ஆண்டு இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
1. ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இல்லம் கட்டுவதற்கான இடத்தினை தந்நது.
2. இதற்கு இ.கி.மி அணுசரனை வழங்கியது.
3. இராணுவத்தினர் உதவிகளும் ஒத்தாசைகும் வழங்கினர்.
4. விடுதலைப் போராளிகள் எங்களால் தொந்தரவு தரப்பட மாட்டாது என உறுதியளித்தனர்.
5. சமூகத்தில் உள்ள பெரியவர்கள் உதவி நின்றனர்.
6. மட்டக்களப்பு இ.இ.மன்றம், இந்து கலாசார அமைச்சு மற்றும் வெளிநாட்டின் சில நிறுவனங்கள் கோயில்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உதவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
( வாழ்த்துக்களை தெரிவித்தோர் னுநவயடைள)
7. புனர்வாழ்வு அமைச்சர் ஆ.ர். அஷ்ரப் அவர்கள் A.L.M. அதாவுல்ல அவர்களின் பரிந்துரையின் படி இரண்டு தடவைகளில் 140×20 கொண்ட கட்டிடத்திற்கு உதவி புரிந்தார்.
8. சிறுவர் நன்னடத்தை திணைக்களம் இல்லத்தைப் பதிவு செய்து பரிமாண நன் கொடை வழங்கியது.
9. இ.கி.மி உதவக்கூடிய நிறுவனங்களை அறிமுகம் செய்து நின்றது.
10. இ.இ.மன்றம் சுற்று மதிலை கட்டி உதவியது.
11. இ.கி.மி நீர்தாங்கி வழங்கியது
12.SIDA அமைப்பு தளபாடங்கள், சமயலறை பொருட்கள், இசைக்கருவிகள் வழங்கியது.
13. பிரார்த்தனை மண்டபம் கட்டுவதற்கு திருவாளர் திவ்ய நாதன் (பா.உ)அவர்கள் நிதி உதவி வழங்கினார்
14. Dr.P.ஆருனகுல சிங்கம் சுவாமியறை
15.Dr.ஆ.தேவராஜன் அவர்கள் சமயலறை அமைத்து தந்தார்
16. சைவபுலவர் சாமித்தம்பி ஐயா அவர்கள் பெரிய கிணறு அமைத்து தந்தார்.
17. Dr.ஆ.தேவராஜன் அவர்கள், Dr.P.தயானந்த ராஜா, P.தர்மேந்திரன் நில அளலை அத்தியட்சகர், திரு.S.பாலசுந்தரம் JP, திரு.ஏ.நடராஜா JP, திரு.S.செந்தூர் ராஜா ஆகியோர் 6 பிள்ளைகளின் தாபரிப்பு தந்தையர்களாக இணைந்துக் கொண்டனர்.
18. அக்கரைப்பற்று STF பிள்ளைகளுக்கான அலுமாரிகளையும் வளவினைச் சுற்றி மண் நிரப்பியும் தந்தது.
19. சர்வோதயம் நிறுவனத்தினரால் வெளி விராந்தையும் ஒரு கிணறும் கட்டித் தரப்பட்டது.
1996-1998
- தமிழ் ஓர்பன் ட்ரஸ்ட் தச்சு உபகரணங்கள் வழங்கியது.
- சுவாமி தந்திரதேவா அவர்கள் தொலைபேசி வசதி
- இலண்டன் திருமதி.நிர்மலா விஜயகுமார் பிள்ளைகளுக்கான உதவி
- BUDS நிறுவனம் உணவு நன்கொடைஇல்லத்திற்கான முன் முகப்பும் முகப்பு கட்டிடமும் (80×20) இராமகிருஷ்ண மிஷனினால் கட்டிக் கொடுக்கப்பட்டது
- இலண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் உணவு நன் கொடை
- MIOTஇலண்டன் உணவு நன் கொடை
- DOTS,Tamil Orphan trust London உணவு நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உதவி
- இலண்டன் திருமதி.நிர்மலா விஜயகுமார் பிள்ளைகளுக்கான தொடர்ந்து உதவி
- சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மாணவர் காரியாலய தளபாட உதவி
- ரோயல் நெதர்லாந்து பராமரிப்பு உதவி
- சிறுவர் நன்னடத்தை திணைக்களம் பரிமான நன்கொடை உதவி
- SCOT உணவு நன்கொடை
- BUDS முச்சக்கர வண்டி
- K.G ஆரியதாச 2 அலுமாரிகள
- வாழ்த்துக்கள் தந்தோர் ஸ்ரீமத் ஆத்மகனானந்தஜீ, ஸ்ரீமத் ஜீவனானந்த ஜீ, ஸ்ரீமத் நித்தியானந்த ஜீ மகராஜ் (இமாலயம்) சுவாமி தந்திரதேவ
1999-2004
1. YMHA ற்கு காணி வாங்கப்பட்து.
2. Advaro புதிய காணியும் அரிசி ஆலையும்.
3. அம்பாறை மாவட்ட புனர் வாழ்வு கழகம் இலுவை பெட்டியுடனான ஒரு உழவு இயந்திரம்.
4. UNICEF நிறுவனம் விளையாட்டு உபகரணங்கள்.
5. ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தொடர்ந்து உதவ முன் வந்தது.
6. கொழும்பு லயன்ஸ் கிளப் பாடசாலை உபகரணங்கள் வழங்கியது
7. சுவிஸ் நாட்டு விமல் ராஜ் குழுவினர் போட்டோ கொப்பி இயந்திரம்
8. ரிசிகேஸ் சர்வமங்கலா ஆனந்த ஜீ உணவு உதவியும் ஆசிகளும் வழங்கினார்
2005-2009
1. கண்டி ரொட்றிக் கிளப் சுனாமி உதவிகள்
2. SCOT, கனக துர்க்கை அம்மன் ஆலயம், முருகானந்தன் சாகாம காணிக்கு உதவிகள்
3. இரத்தினபால தேரர் உணவிற்கான உதவி
4. செல்வரூபனும் நண்பர்களும் லுஆர்யு கட்டிட உதவி
5. SKYROSE பகல் நேர வகுப்புகளுக்கு உதவி (3 வருடத்திற்கு தொடர் உதவி)
6. OPTIMA Foundation மாட்டுப்பண்ணைக்கு உதவி
7. அண்ணா கைலர் பாடசாலை மாணவர்கள் இலண்டன் பிள்ளைகள் பராமரிப்பு உதவி
8. London helping lanka தளபாட உதவி
9. Buds கனக துர்க்கை அம்மன் ஆலயம் உணவு உதவி
10.Helping hand சாகாம காணி உதவி
11. அம்பாறை மாவட்ட இணையம் புநநெசயவழச
12. இந்து கலாசார திணைக்களம் கலாசார உதவி
2010-2019
1.சுமதி அசோக்குமார் வயல் செய்கைக்கான உதவி2.தொண்டு நாதன் சுவாமி அமரிக்கா உணவுக்கான உதவி
3.SKYROSEபகல் நேர வகுப்புகளுக்கு உதவி
4.திருவாளர் ஜெயசுந்தரன் உணவு அன்பளிப்பு
5.SCOT கல்வி அபிவிருத்தி உதவி
6.இந்து இளைஞர் மன்றத்தினால் வாடகைப் பொருட்கள் இல்லத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டது கதிரைகள்
7.இல்லத்தின் முகப்புத் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டது.
8.அவுஸ்திரேலியா துதுவர் ஆலயத்தினால் பாலர் பாடசாலை கட்டிடம் அமைக்கப்பட்டது.
9.சுமதி அசோக்குமார் அவரினால் காணி அன்பளிப்பு மற்றும் சுற்றுலா செல்லபட்டது.
10.இல்லத்திற்கான காணி பெறப்பட்டது.
11.25வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
2020 -2024
1. கொரோன நிவாரணப் பொருட்கள் YMHA இனால் வழங்கப்பட்டது.
2. வாடகை பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன
3. சாகாம காணிக்கு நிரந்தர நீர்பாசனம் பெறப்பட்தோடு ஏர் பூட்டு விழா அரசாங்க அதிபரால் நிறைவேற்றப்பட்டது.
4. இல்லத்திற்கான மேலும் ஒரு காணி Y.M.H.A யினால் பெறப்பட்டது.
5. சொர்ணம் நகை மாளிகை கடையினரால் பகுதிப் பங்குடன் Y.M.H.A நிதியிலிருந்து சுவாமியறை திருத்தப்பட்டது.
6. இந்து கலாசார அமைச்சின் நிதியிலிருந்து சாப்பாட்டறை திருத்தப்பட்டது.
7. திருமூலருக்கு உருவச் சிலை ஊர்வலமாக எடுக்கப்பட்டு விழா செய்யப்பட்டது.
8. விவேகானந்தரின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
9. முத்து விழா கொண்டடப்பட்டது.
தொடர்ச்சியான உதவிகள்
1. சமுர்த்தி நிவாரண உதவிகள்
2. பரிமான நன்கொடை உதவிகள்
3. இந்து கலாசார அமைச்சின் கலாசார செயற்பாட்டு உதவிகள்
4. ஸ்ரீ கனக துர்க்கை அம்மனின் உணவு உதவிகள்
5. தொண்டுநாத சுவாமிகளின் வருடாந்த உதவிகள்
6. நிர்மலா விஜயகுமாரின் உணவு உதவிகள்
7. Y.M.H.A உதவிகள்
8. செல்வருபன் அவர்களின் உணவு உதவிகள்
9. DATA அமைப்பின் உணவு உதவிகள்
10. உதவும் கரங்களின் வருடாந்த உதவிகள்
உணவு அன்பளிப்பாளர்கள்
உள்நாடு